Bharat Mobility Global Expo 2025: 20-க்கும் மேற்பட்ட மின்சார கார்கள் அறிமுகம்
இந்தியாவில் நடைபெற்றுவரும் The Mobility Show-வில் 20-க்கும் மேற்பட்ட மின்சார கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டோ எக்ஸ்போ Bharat Mobility Global Expo 2025-ல் 20க்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
Maruti Suzuki, Hyundai, Mercedes, BMW, BYD போன்ற பிராண்டுகள் தங்கள் புதிய மின்சார வாகனங்களை எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியுள்ளன.
முதல் நாளில், Maruti Suzuki மின்சார கார் e-Vitara-வை வெளிப்படுத்தியது. அதே நேரத்தில், Hyundai Motor India தனது மலிவு விலை மின்சார காரான Creta EV-ஐ அறிமுகப்படுத்தியது.
எக்ஸ்போவின் இரண்டாவது நாளில் Vayve Mobility இந்தியாவின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் கார் Vayve Eva-வை அறிமுகப்படுத்தியது.
வியட்நாமைச் சேர்ந்த VinFast நிறுவனம் இரண்டு மின்சார கார்களுடன் இந்தியாவில் நுழைந்துள்ளது.
Tata Motors நிறுவனம் Nexon EV எலெக்ட்ரிக் காரின் Bandipur பதிப்பை அறிமுகம் செய்துள்ளது. புலிகள் மற்றும் யானைகளுக்கு பெயர் பெற்ற கர்நாடகாவின் பந்திப்பூர் தேசிய பூங்காவிற்கு இந்த சிறப்பு பதிப்பு மாடல் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 17-ஆம் திகதி தொடங்கிய இந்த நிகழ்வு ஜனவரி 22-ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
The Mobility Show, Bharat Mobility Global Expo 2025, Auto Expo 2025, Electric Cars