தேர்தல் பிரசாரத்தில் பெண்களை உருவகேலி செய்வதா?- ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கண்டனம்
தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் சுகன்யாவை ஆதரித்து இன்று அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், அத்தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த பிரச்சாரத்தில் பேசிய மு.க. ஸ்டாலின், இந்தத் தொகுதி தவெக வேட்பாளரை பெட்டி பாமா, பல்டி பாமா என சத்தியத்திற்கு விரோதமாக செயல்பட்ட அந்த வேட்பாளரை மக்கள் அழைக்கின்றனர் என பேசினார்.
மேலும், தவெக வேட்பாளர் சத்யபாமாவின் உருவம் குறித்தும் பேசியிருந்தார். இதற்கு தவெக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரமா? பெண்களை கேலி செய்யும் கேவலப் பிரச்சாரமா? என அமைச்சர் செங்கோட்டையன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது..,
தேர்தல் பிரச்சாரமா?பெண்களை கேலி செய்யும் கேவலப் பிரச்சாரமா?
பெண்களை கேலி பேசும் டிஎன்ஏ
அது திமுகவின் கேடுகெட்ட டிஎன்ஏ!
நிலை மாறினால் குணம் மாறுவான் பொய் நீதியும் நேர்மையும் பேசுவான் தினம் ஜாதியும் பேதமும்கூறுவான் !
பெண்களை இழிவாகப் பேசுவதையே வழக்கமாகக் கொண்ட திமுக தலைவரே
மன்னிப்பு கேள்!
மன்னிப்பு கேள்!!
தேர்தல் பிரச்சாரமா?பெண்களை கேலி செய்யும் கேவலப் பிரச்சாரமா?
— K.A Sengottaiyan (@KASengottaiyan) October 2, 2026
பெண்களை கேலி பேசும் டிஎன்ஏ
அது திமுகவின் கேடுகெட்ட டிஎன்ஏ!
நிலை மாறினால்
குணம் மாறுவான்
பொய் நீதியும் நேர்மையும் பேசுவான்
தினம் ஜாதியும் பேதமும்கூறுவான் !
பெண்களை இழிவாகப் பேசுவதையே வழக்கமாகக் கொண்ட
திமுக தலைவரே…
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |