பூஸ்டர் தடுப்பூசியாக மாடர்னா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கிய ஐரோப்பிய ஒன்றியம்!
மாடர்னா தடுப்பூசியை பூஸ்டர் தடுப்பூசியாக பயன்படுத்திகொள்ள ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரை செய்துள்ளது.
மாடர்னா கோவிட்-19 தடுப்பூசியை பூஸ்டர் தடுப்பூசியாக 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு கொடுக்கலாம் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்து கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸுக்கு பிறகு குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் கழித்து இந்த தடுப்பூசியை பூஸ்டர் தடுப்பூசியாக கொடுக்க முடிவு செய்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இரண்டாவது COVID-19 பூஸ்டர் தடுப்பூசியாக மாடர்னா அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது டோஸுக்கு பிறகு 6 முதல் 8 மாதங்ககளில் மூன்றாவது டோஸ் செலுத்தப்படுவதால் குறைந்து வரும் ஆன்டிபாடி அளவுகளை அதிகரிக்க வழிவகுத்தது என்று ஐரோப்பிய மருந்துகள் ஏஜென்சி கூறியது.
இந்த மாத தொடக்கத்தில் ஐரோப்பிய மருந்துகள் ஏஜென்சி Pfizer-BioNTech இன் (PFE.N), (22UAy.DE) பூஸ்டரை அங்கீகரித்தது.
நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு Pfizer-BioNTech அல்லது Moderna ஆகியவற்றில் இருந்து மூன்றாவது டோஸ் ஷாட்டை பரிந்துரைத்துள்ளது.