பிரித்தானியாவில் பரவும் புதிய கொரோனா வைரஸிலிந்து எங்கள் மருந்து காப்பாற்றும்: நம்பிக்கை தரும் அமெரிக்க நிறுவனம்
அமெரிக்க நிறுவனமான Moderna Inc, அதன் COVID-19 தடுப்பூசியால் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி, இங்கிலாந்தில் இப்பொது புதிதாக பரவிவரும் கொரோனா வைரஸ் வகைகளுக்கு எதிராக பாதுகாப்பாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
எந்தவொரு விகாரத்திற்கும் எதிராக தடுப்பூசியின் செயல்பாட்டை உறுதிப்படுத்த சோதனைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் புதிய விகாரம் 70 சதவீதம் வேகமாகவும் வீரியமாக பரவக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், பிரித்தானியா அதன் பல பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் மாடர்னாவின் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.
சமீபத்தில், அமெரிக்க அரசால் அவசரகால பயன்பாட்டுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட இந்த தடுப்பூசி, இன்றுவரை உள்ள தரவுகளின் அடிப்படையில் வைரஸின் புதிய மாறுபாட்டிற்கு எதிராக பாதுகாப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"நாங்கள் ஏற்கனவே, தொற்றுநோய் வெடித்ததிலிந்து பரவிய பல வகையான SARS-CoV-2 வைரஸ்களால் பாதிக்கப்பட்ட விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு எங்கள் மருந்தை செலுத்தி, அவர்களுடைய sera-வை சோதித்தோம், எங்கள் தடுப்பூசி சமமாக பயனுள்ளதாக இருப்பதைக் கண்டறிந்துள்ளோம்" என மாடர்னா கூறியுள்ளது.
மேலும், அதன் எதிர்பார்ப்பை உறுதிப்படுத்த வரும் வாரங்களில் தடுப்பூசியின் கூடுதல் சோதனைகளை மேற்கொள்ளப்போவதாக மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது.