ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி
இந்திய பிரதமர் மோடி நேற்று ஜேர்மனி சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
பிரதமர் மோடி நேற்று ஜேர்மனி சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
அங்குள்ள கள நிலவரம் மற்றும் அதனால் பிராந்தியம் மற்றும் உலகம் சந்திக்கும் சவால்களை குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
தாலிபான்களால் எழுந்துள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு இடையே, அங்கே சிக்கியிருக்கும் மக்களை மீட்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
மெர்கலுடனான இந்த பேச்சு குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் தளத்தில்,
‘ஜேர்மன் சான்சலர் மெர்க்க மெர்கலுடன் இன்று (நேற்று) மாலையில் பேசினேன். அப்போது ஆப்கானிஸ்தானின் சமீபத்திய நிலவரங்கள் உள்பட இருதரப்பு, பலதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம். இந்தியா-ஜேர்மனி தந்திரோபாய கூட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான நமது உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
Spoke to Chancellor Merkel this evening and discussed bilateral, multilateral and regional issues, including recent developments in Afghanistan. Reiterated our commitment to strengthening the India-Germany Strategic Partnership.
— Narendra Modi (@narendramodi) August 23, 2021