போர் பதற்றங்களுக்கு மத்தியில் இஸ்ரேல் செல்லும் மோடி - என்ன திட்டம்?
இந்திய பிரதமர் மோடி இஸ்ரேல் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் செல்லும் மோடி
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் போர், கடந்த அக்டோபரில் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது.
இதனிடையே அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் என எச்சரித்துள்ளது.

இந்த சூழலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்திய பிரதமர் மோடியை இஸ்ரேலுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
தற்போது அந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, வரும் பிப்ரவரி 27-28 ஆம் திகதிகளில் இஸ்ரேலுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோடி இஸ்ரேலுக்கு வர உள்ளதாக இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் தெரிவித்துள்ளார்.
என்ன திட்டம்?
பிரதமர் மோடியின் பயணத்தின் போது, இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) இறுதி செய்யப்படலாம்.

மேலும், பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, விவசாயம், நீர் மேலாண்மை, குறைக்கடத்திகள் மற்றும் உயர் தொழில்நுட்பம் ஆகியவற்றில் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும். ஏவுகணைகள், ட்ரோன்கள் முதல் கண்காணிப்பு மற்றும் வான் பாதுகாப்பு தளங்கள் வரையிலான முக்கியமான அமைப்புகளை வழங்கி, இந்தியாவின் முக்கிய பாதுகாப்பு தொழில்நுட்ப கூட்டாளிகளில் ஒன்றாக இஸ்ரேல் உள்ளது.
இந்தியா பிரதமர் மோடி கடைசியாக 2017 ஆம் ஆண்டில் இஸ்ரேல் சென்றார். 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் இஸ்ரேல் செல்ல உள்ளார். இதுவரை, இஸ்ரேலுக்கு சென்ற முதல் பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |