டெல்லி மாணவர்கள் போராட்டம்: எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார்: இந்திய அரசு அழைப்பு
டெல்லியில் போராடும் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
மாணவர்களுக்கு அரசு அழைப்பு
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மற்றும் காக்ரோச் ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மாணவர்களுடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசின் தொடர் முயற்சிகளை விளக்கிய அமைச்சர் ஜிதேந்திர சிங், நேற்று மதியம் முதல் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நான்கு முறை முயற்சித்து முன்மொழிவுகளை அனுப்பியதாக தெரிவித்தார்.

மேலும் நமது இளைய தலைமுறை நண்பர்கள் எப்போது விரும்புகிறார்களோ அப்போது இது தொடர்பான விவாதத்தை நடத்த அரசு தயாராக இருப்பதாக குறிப்பிட்ட அவர். இது தங்களது திறந்த அழைப்பு என்றும் அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை சுமுகமாகவும், எளிதாகவும் நடைபெற நம்முடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி நட்டாவும் கலந்து கொள்வார் என்று ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
நாங்கள் கவுரவத்தை பற்றி கவலைப்பட வில்லை. இந்த விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலமாக படிப்படியாக தீர்வு காண தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த பேச்சுவார்த்தையில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி அழைப்பு
இந்திய பிரதமர் மோடி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டார்.
அதில் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து விரைவான நீதி மற்றும் கடுமையான தண்டனைகளை பெற்றுத் தர துரித நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று உத்தரவு வழங்கியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |