Twitter தளத்தில் 100M Followers -யை எட்டிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி!
சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை ட்விட்டர் எக்ஸ் தளத்தில் 10 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.
100M Followers
இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளங்களில் பிரபலமாக அறியப்படும் நபர்களில் ஒருவர். இவருடைய YouTube -ல் 2.5 கோடிக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.
அந்தவகையில் யூடியூப் தளத்தில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். அதேபோல, Facebook, Whatsapp channel, Instagram தளத்திலும் செல்வாக்கு மிக்கவராக உள்ளார்.
அந்த வரிசையில் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடியை 10 கோடி பேர் பின்தொடர்கின்றனர். இதன்மூலம் எக்ஸ் தளத்தில் செல்வாக்கு மிக்க உலக தலைவர்களில் முதலிடம் பிடித்துள்ளார்.
அந்த வரிசையில் ட்விட்டர் தளத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை 3.81 கோடி பேரும், துபாய் மன்னர் ஷேக் முகமதுவை 1.12 கோடி பேரும், கத்தோலிக்க மதத் தலைவர் போப் பிரான்சிஸை 1.85 கோடி பேரும் பின்தொடர்கின்றனர்.
பிரதமர் மோடி இது தொடர்பாக தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "எக்ஸ் தளத்தில் 10 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.
தமிழ்நாட்டில் நடந்த என்கவுண்டர்.., அம்பானி வீட்டு திருமணத்தை முடித்துவிட்டு வந்த ரஜினி என்ன சொன்னார்?
இந்த தளத்தில் விவாதம், கருத்துகள், மக்களின் ஆசீர்வாதங்கள், ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவை வருங்காலத்திலும் தொடரும்’’ என்று கூறியுள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் பிரதமர் மோடியை எக்ஸ் தளத்தில் 3 கோடி பேர் புதிதாக பின்தொடர்ந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |