இந்தியாவுக்குச் சொந்தமான நீர் இனி வெளிநாடுகளுக்கு செல்லாது - மோடி திட்டவட்டம்
இந்தியாவுக்குச் சொந்தமான நீர் இனிமேல் வெளிநாடுகளுக்கு செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நீர் இந்தியாவின் உரிமையானது என்பதையும், இனி இந்தியாவுக்கே பயன்படுத்தப்படும் என்பதையும் புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் உறுதியுடன் தெரிவித்தார்.
இந்தக் கருத்து, 1960-இல் கையெழுத்தான இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை கடந்த மாதம் இந்தியா தடைசெய்த பின்னர் வெளியாகியுள்ளது.
இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானின் 80 சதேவீத விவசாய நிலங்களுக்கு நீர் வழங்குவதில் முக்கிய பங்கு வகித்தது. ஆனால், சமீபத்தில் இந்திய காஷ்மீரில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை இந்தியா நேரடியாக குற்றம் சாட்டியிருந்தது.
இதனையே காரணமாகக் கொண்டு, நீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்தியுள்ளது.
பாகிஸ்தான் இதற்கெதிராக கடும் பதிலடி நடவடிக்கைகளை எடுக்கும் என எச்சரிக்கையுடன், “நமக்கு உரிமையான நீரை தடுத்து வைத்தல் ஒரு போர் நடவடிக்கையாகவே கருதப்படும்” எனவும் அறிவித்துள்ளது.
இதனிடையே, இந்தியா காஷ்மீர் பகுதியில் உள்ள நான்கு ஹைட்ரோ பவர் திட்டங்களின் கட்டுமான வேகத்தை அதிகரித்து வருகிறது. மேலும், நீர் தேக்க வசதிகளையும் விரைவில் மேம்படுத்த தொடங்கியுள்ளது.
இந்த நிலைமையில், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ், இரு நாடுகளும் பிணக்கைத் தவிர்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வருகின்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Keywords: India Pakistan water dispute, Indus Waters Treaty suspended, Modi water sharing statement, India Pakistan Kashmir tensions, India stops water flow to Pakistan, Indus water India decision, Modi Pakistan terror response, India hydro projects Kashmir, Balochistan attack India link, UN Kashmir water treaty