உக்ரைன் ஜனாதிபதியை இந்தியாவிற்கு அழைத்த மோடி., 3 மணிநேரம் நடந்த சந்திப்பு
உக்ரைன் சென்றிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜெலென்ஸ்கியை இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைனில் இரண்டரை ஆண்டுகளாக நீடித்து வரும் போருக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) உக்ரைன் சென்றார்.
ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்த மோடி, "இந்தியா எப்போதும் அமைதியை விரும்புகிறது. சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தேன். பின்னர் நான் ஊடகங்களுக்கு முன்னால் அவரது கண்களை சந்தித்து, இது போருக்கான நேரம் அல்ல என்று கூறினேன்." என்று கூறினார்.
உக்ரைனின் மரின்ஸ்கி அரண்மனையில் சுமார் 3 மணி நேரம் மோடியும், ஜெலன்ஸ்கியும் இந்த சந்திப்பு நடைபெற்றது. அவர் ஜெலன்ஸ்கியை இந்தியாவுக்கு வருமாறு அழைத்தார்.
கூட்டத்திற்குப் பிறகு, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் செய்தியாளர் கூட்டத்தில், இரு தலைவர்களும் இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது குறித்தும் பேசினர்.
"சந்தையின் நிலைக்கு ஏற்ப எண்ணெய் வாங்குவதற்கான முடிவு எடுக்கப்படுகிறது. இதற்குப் பின்னால் எந்த அரசியல் காரணமும் இல்லை" என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஜெலன்ஸ்கியுடன் உக்ரைன் தேசிய அருங்காட்சியகத்திற்கு சென்ற மோடி, அங்கு போரில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தினார். குழந்தைகள் நினைவிடத்தில் பொம்மைகளையும் வைத்தார்.
முன்னதாக, பிரதமர் மோடி ஆகஸ்ட் 21 மற்றும் 22 ஆகியதிகதிகளில் போலந்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இங்கு அவர் உக்ரைன் நெருக்கடியை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பது குறித்து பேசினார்.
பின்னர் அவர் 22-ம் திகதி இரவு சிறப்பு ரயிலில் உக்ரைன் புறப்பட்டுச் சென்றார்.
உக்ரைன் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி போலந்து புறப்பட்டுச் சென்றார். உக்ரைன் சென்ற முதல் இந்திய பிரதமர் இவர் தான்.
1991-இல் சோவியத் யூனியன் உடைந்த பின்னர் உக்ரைன் உருவாக்கப்பட்டது. அதன்பிறகு இந்திய பிரதமர்கள் யாரும் உக்ரைன் செல்லவில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 1992-இல் நிறுவப்பட்டன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India Ukraine, Modi invites Zelensky to India, PM Narendra Modi Ukraine Visit