நடுக்கடலில் 45 மணி நேரம் தியானம் செய்யும் மோடி.., இந்த உணவை மட்டும் தான் சாப்பிடுவாராம்
மக்களவை தேர்தல் முடியும் நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு வந்து அங்குள்ள விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம் மேற்கொள்கிறார்.
மோடி தியானம்
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் இறுதிகட்ட தேர்தல் ஜூன் 1 -ம் திகதி நடைபெறவிருக்கிறது.
இதையடுத்து மக்களவை தேர்தலுக்கான முடிவுகள் ஜூன் 4 -ம் திகதி அறிவிக்கப்படவிருக்கிறது. இந்நிலையில், இன்று (மே 30) இந்திய பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி வருகிறார்.
பின்னர், இங்குள்ள விவேகானந்தர் மண்டபத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக, 45 மணி நேரம் தியானம் செய்யவுள்ளார்.
142 வருடங்களுக்கு முன்பு கன்னியாகுமரி பாறையில் அன்னை பகவதியம்மன் ஒற்றைக்காலில் தவமிருந்தார். அவரின் பாதச்சுவடு இப்போதும் அங்கிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த இடத்தில் தான் கடந்த 1882-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் திகதி முதல் 26-ம் திகதி வரை 3 நாட்கள் சுவாமி விவேகானந்தர் தவம் இருந்தார். அவரின் நினைவாக தான் அங்கு விவேகானந்தர் நினைவு மண்டபமும் அமைக்கப்பட்டது.
தற்போது, இந்த இடத்தில் மோடி தியானத்தை மேற்கொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2019 தேர்தலில் இமயமலையில் கேதார்நாத் குகையில் தியானம் செய்தார்.
அங்கு, இடுப்பில் காவித்துண்டு, தலையில் பாரம்பரிய உத்தரகாண்ட் தொப்பி என மின்வசதி இல்லாத அறையில் காவி உடையுடன் 17 மணி நேரம் தியானம் மேற்கொண்டார். அதேபோல தான் தற்போதும் தியானம் மேற்கொள்கிறார்.
அவர் தியானம் செய்யவுள்ள 45 மணிநேரமும் இளநீர், பழச்சாறு போன்ற திரவ உணவுகளை மட்டுமே எடுத்து கொள்வாராம். அவருக்காக சிறப்பு வசதிகள் எதுவும் செய்ய வேண்டாம் என்று விவேகானந்த கேந்திரா பொறுப்பாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், பிரதமரின் வருகையையொட்டி 3 நாட்களும், பாதுகாப்பு படையினர், மருத்துவக் குழுவினர், கேந்திரா பணியாளர்கள் மட்டுமே விவேகானந்தர் பாறையில் தங்கி இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |