பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்- இந்திய பிரதமர் மோடி சந்திப்பு
இத்தாலி சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்து பேசியுள்ளார்.
ஜி7 கூட்டமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
இக்கூட்டமைப்பி்ன் உச்சிமாநாடு இத்தாலியின் அபுலியா பிராந்தியத்தில் நேற்று முதல் தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.
இன்று நடைபெறும் மாநாட்டு நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார், இதற்காக இன்று அதிகாலை இத்தாலி சென்றடைந்தார்.
அங்கு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்து பேசினார், அப்போது இருதரப்பு உறவுகள் மற்றும் பொதுவான நலன்கள் குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.
ரிஷி சுனக் மட்டுமின்றி பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஆகியோரையும் பிரதமர் மோடி சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.