33 ஆண்டுகளுக்கு முன்பு விவேகானந்தர் பாறையில் மோடி! வைரலாகும் புகைப்படம்
33 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் மோடி எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
தியானம்
மக்களவை தேர்தல் முடியும் நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு வந்து அங்குள்ள விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம் மேற்கொள்கிறார்.
அவர் தியானம் செய்யவுள்ள 45 மணிநேரமும் இளநீர், பழச்சாறு போன்ற திரவ உணவுகளை மட்டுமே எடுத்து கொள்வாராம்.
மேலும், பிரதமரின் வருகையையொட்டி 3 நாட்களும், பாதுகாப்பு படையினர், மருத்துவக் குழுவினர், கேந்திரா பணியாளர்கள் மட்டுமே விவேகானந்தர் பாறையில் தங்கி இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
வைரலாகும் புகைப்படம்
இந்நிலையில், கடந்த 1991 -ம் ஆண்டில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் அவரது சிலையின் கீழ் பிரதமர் மோடி நிற்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படமானது 1991 டிசம்பர் 11 -ம் திகதி கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையிலிருந்து தொடங்கி காஷ்மீரில் முடிவடைந்த ஏக்தா யாத்திரையின் போது எடுக்கப்பட்டது.
இந்த புகைப்படத்தில் கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் உள்ளனர். இந்த யாத்திரைக்கு முரளி மனோகர் ஜோஷி தலைமை தாங்கினார். அப்போது பாஜக காரியகர்த்தாவாக இருந்த மோடி யாத்திரை அணிவகுப்பை ஏற்பாடு செய்வதில் பணியாற்றினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |