11 நாடுகளுக்கு இலவச இ-விசா வழங்கும் இந்தியா; மோடி முன்மொழிவு
modi propose free e-visa for asean countries: ஆசியான் அமைப்பில் உள்ள 11 நாடுகளை சேர்ந்த குடிமக்களுக்கு இலவச இ-விசா வழங்கும் திட்டத்தை இந்திய பிரதமர் மோடி 23வது ASEAN - INDIA உச்சி மாநாட்டில் முன்மொழிந்துள்ளார்.
ஆசியான் நாடுகளுக்கு இ-விசா வழங்க இந்தியா முன்மொழிவு
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற 23வது ASEAN - INDIA உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

இதில் இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்தும் வகையில், பாதுகாப்பு, தொழில்நுட்பம், கல்வி, சுற்றுலா, அணுசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான திட்டங்களை முன்மொழிந்துள்ளார்.
இதில் ஒரு பகுதியாக ஆசியான் நாடுகளுக்கு இலவச மின்னணு விசா (e-Visa) வழங்கும் திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.

இந்த நடவடிக்கை செயல்படுத்தப்பட்டால், ஆசியான் நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தியப் பயணம் மேலும் எளிதாகவும் மலிவாகவும் அமைந்து, சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதோடு, இந்தியாவிற்கும் தென்கிழக்கு ஆசியாவிற்கும் இடையிலான மக்கள் உறவுகளை வலுப்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இத்திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும், அதற்கான தகுதித் தேவைகள் குறித்த விவரங்களை இந்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை.
இ-விசா என்பது விசா இல்லாத நுழைவு அல்ல, மாறாக கட்டண விலக்கு ஆகும். விசாவின் கட்டணம் நீக்கப்பட்டாலும், பயணிகள் அதிகாரப்பூர்வ இ-விசா இணையதளம் மூலம் முறையான விண்ணப்ப செயல்முறையை முடிக்க வேண்டும்.
2025 ஆம் ஆண்டில் ஆசியான் நாடுகளிலிருந்து 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர்.
1967 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆசியான் அமைப்பில் புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, திமோர்-லெஸ்டே மற்றும் வியட்நாம் ஆகிய 11 தென்கிழக்கு ஆசிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.