உலக கின்னஸ் சாதனை படைத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சி
இந்த ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுடன் சேர்ந்து நடத்திய நிகழ்ச்சிக்கு உலக கின்னஸ் சாதனை கிடைத்துள்ளது.
கின்னஸ் சாதனை
இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் ‘பரிக் ஷா பே சர்ச்சா' என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இது ஆண்டுதோறும் ஜனவரி அல்லது பிப்ரவரியில் நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் கலந்து கொள்வார்கள். இவர்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகவும் காணொலி வாயிலாகவும் உரையாடுவார்.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் என்னவென்றால் மாணவர்கள் தேர்வை சுமையாக கருதாமல் கற்றலின் கொண்டாட்டமாக கருத வேண்டும் என்பதுதான்.
அந்தவகையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மைகவ் என்ற இணையதளத்தில் ஒரே மாதத்தில் 3.53 கோடி பேர் பதிவு செய்தனர்.
அதுமட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இந்த நிகழ்ச்சியை 21 கோடி பேர் பார்த்துள்ளனர். இந்நிலையில், பொது மக்களின் பயன்பாட்டு இணையதளத்தில் அதிக பேர் பதிவு செய்ததற்காக இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
அதன்படி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது உலக சாதனைக்கான சான்றிதழை கின்னஸ் அமைப்பின் நடுவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இந்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |