மேக்ரானை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி: இந்திய பிரதமர் மோடி பகிர்ந்த புகைப்படம்
ஜி-7 மாநாட்டிற்கு சென்ற இந்திய பிரதமர் மோடி, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
ஜேர்மனியில் நடந்த ஜி-7 மாநாட்டில் கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான், இத்தாலி, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 7 நாடுகள் கலந்துகொண்டன.
இந்த நாடுகளுடன் சில நட்பு நாடுகளும் மாநாட்டில் பங்கேற்றன. அந்த வகையில், ஸ்க்ளோஸ் எல்மா நகரில் நடந்த இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொண்டார்.
ஜி-7 மாநாட்டில் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் கருத்துரிமையை பாதுகாக்கும் வகையில் 2022 உறுதியான ஜனநாயக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்திய பிரதமர் மோடி உலக தலைவர்களுடன் பேசினார். பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடன் கைகுலுக்கி பேசிய மோடி அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதனுடன் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Delighted to meet President @EmmanuelMacron. pic.twitter.com/IPX3UtIn66
— Narendra Modi (@narendramodi) June 27, 2022
PC: ANI/PTI/AP/Twitter (@narendramodi)
PC: Reuters Photo