பிரதமர் மோடியின் சரும பராமரிப்பு ரகசியம்! சிரிப்பலையை ஏற்படுத்திய இந்திய கிரிக்கெட் வீராங்கனை
இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் சரும பராமரிப்பு குறித்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை கேள்வி எழுப்பியது சக வீரர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.
உலகக் கோப்பை வீராங்கனைகளை சந்தித்த மோடி
மகளிர் உலகக் கோப்பை போட்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பெற்ற முதல் உலகக் கோப்பையை வென்று வந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை நேரில் அழைத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுகளை தெரிவித்தார்.
Lovely Gesture ❤️
— Ankur Singh (@iAnkurSingh) November 6, 2025
Pratika Rawal was injured so came on Wheelchair.
Modiji noticed that she could not take food, so he asked what she likes and served her pic.twitter.com/K5gd46e5wI
மேலும் இந்த தொடரில் இந்திய அணியின் விடாமுயற்சியையும், மீண்டு வந்த திறனையும் பிரதமர் மோடி மனதார வாழ்த்தினார்.

அரங்கத்தில் எழுந்த சிரிப்பலை
இந்த உரையாடலின் போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீரர் ஹர்லீன் தியோல் இந்திய பிரதமர் மோடியிடம் “உங்கல் சருமப் பராமரிப்பு ரகசியம் என்ன?” என்று குறும்புத்தனத்துடன் கேள்வி எழுப்பியது அரங்கத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
மேலும் மோடியின் சருமம் மிகவும் பொலிவுடன் இருப்பதாகவும் ஹர்லீன் தியோல் குறிப்பிட்டார்.
Every Indian feels immense pride in Team India’s World Cup victory. It was a delight interacting with the women’s cricket team. pic.twitter.com/alqzNrcqf9
— Chirag Gothi (@AajGothi) November 6, 2025
ஹர்லீன் தியோல் கேள்விக்கு சிரித்து கொண்டே பதிலளித்த மோடி, “நான் அதைப்பற்றி அதிகமாக யோசித்தது இல்லை என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் சக வீரரான ஸ்னே ராணா, “நாட்டு மக்களின் அன்பு தான் பிரதமரை இவ்வளவு பொலிவுடன் வைத்திருக்கிறது என்று கூறினார்.
பிரதமர் மோடியும் அதை ஏற்றுக் கொண்டு, நிச்சயமாக அதுதான் காரணம், இதுவே பலத்தின் பெரிய ஆதாரம் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் நான் அரசாங்கத்தில் பல ஆண்டுகளாக செலவிட்டு வருகிறேன், இருந்த போதும் எனக்கான ஆசீர்வாதங்கள் தொடர்ந்து கொடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |