2 -வது நாள் தியானத்தை தொடங்கினார் பிரதமர் மோடி! வெளியானது புகைப்படம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் 2 -வது நாள் தியானத்தை தொடங்கியுள்ளார்.
தியானம் செய்யும் மோடி
மக்களவை தேர்தல் முடியும் நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு வந்து அங்குள்ள விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானத்தை மேற்கொண்டு வருகிறார்.
அவர் தியானம் செய்யவுள்ள 45 மணிநேரமும் இளநீர், பழச்சாறு போன்ற திரவ உணவுகளை மட்டுமே எடுத்து கொள்வாராம்.
அதன்படி, நேற்று இரவு விவேகானந்தர் பாறையின் மீது உள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து பிரதமர் மோடி தியானத்தை ஆரம்பித்தார். பின்னர், இன்று அதிகாலை வரை தியானம் செய்தபடியே இருந்தார்.
இதன்பிறகு, காலை 5 மணிக்கு தியான மண்டபத்தை விட்டு வெளியே வந்து 5.55 மணிக்கு சூரிய உதயகாட்சிகளை ரசித்தார். பின்னர், ஸ்ரீபாத மண்டபத்திற்கு சென்று 10 நிமிடம் அமர்ந்திருந்தார்.
இந்நிலையில், இன்று காலை 7.15 மணிக்கு மீண்டும் தியான அறைக்கு சென்று தன்னுடைய 2 -வது நாள் தியானத்தை தொடங்கினார்.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி சுற்றுலா பணிகள் நேற்று மதியத்துக்கு பிறகு அனுமதிக்கப்படவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2019 தேர்தலில் இமயமலையில் கேதார்நாத் குகையில் தியானம் செய்தார். அங்கு, இடுப்பில் காவித்துண்டு, தலையில் பாரம்பரிய உத்தரகாண்ட் தொப்பி என மின்வசதி இல்லாத அறையில் காவி உடையுடன் 17 மணி நேரம் தியானம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
विरोधियो को दिनभर रुलाने के लिए वीडियो आ गया #KanyaKumari #ModiAgain pic.twitter.com/lPpgthcAqk
— Hardik Bhavsar (Modi Ka Parivar) (@Bitt2DA) May 31, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |