கூட்டணியில் இலாகா பங்கீட்டில் இழுபறி.., மோடியின் பதவியேற்பு ஒத்திவைப்பு
நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலாகா பங்கீட்டில் இழுபறி
மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடம் ஒதுக்குவது? பாஜக வில் யார் யாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது? என்பது குறித்தான ஆலோசனை நடைபெற்று வருகிறது.
ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் 3 முக்கிய மத்திய மந்திரி பதவிகளையும், ராஜாங்க மந்திரி பதவிகளையும் அவர் எதிர்பார்த்து பாஜக மூத்த தலைவர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.
அதுபோல், லோக்ஜன சக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான், மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர் குமாரசாமி, சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, பீகார் முன்னாள் முதல்-மந்திரி ஜிதன் ராம் ஆகியோரும் தலா ஒரு மந்திரி பதவி கேட்கிறார்கள்.
சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இருவரும் முக்கிய இலாகாக்களை கேட்டாலும், பாரதிய ஜனதா கட்சி 6 முக்கிய அமைச்சகத்தை விட்டுக் கொடுக்க மறுத்துள்ளது.
ரெயில்வே, உள்துறை, நிதி, பாதுகாப்பு, சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய 6 துறைகளையும் யாருக்கும் ஒதுக்க இயலாது என மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பதவியேற்பு ஒத்திவைப்பு
இந்நிலையில், கூட்டணியில் இலாகா பங்கீடு இறுதியாகத்தால் , வருகிற 8ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவிருந்த மோடியின் பதவியேற்பு விழா தள்ளிப்போக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டணியில் இலாகா பங்கீடு நிறைவு பெற்ற பிறகு பதவியேற்பு விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிகிறது.
சனிக்கிழமைக்குள் இலாகா பங்கீட்டை இறுதி செய்ய பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது.
எனவே, சனிக்கிழமைக்குள் இலாகா ஒதுக்கீடு முடிந்தால் ஞாயிற்றுக்கிழமை மோடி பதவியேற்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |