பாஜக கூட்டணியில் மத்திய அமைச்சர் யார் யார்? வெளியான தகவல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அமைச்சரவையில் கூட்டணி கட்சியினர் யார், யாருக்கு எந்த அமைச்சரவை பதவிகளைக் கேட்கிறார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
வெளியான தகவல்
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்றது.
புதிய அமைச்சரவை பதவியேற்க ஏதுவாக 17-வது மக்களவையை கலைக்க பரிந்துரைத்து இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் கூட்டணி ஆதரவு கேட்டு பாஜக கோரிக்கை வைத்த கட்சிகள் தங்களுக்குத் தேவையான இலாக்காக்களைக் கேட்டு பிடிவாதம் பிடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி சந்திரபாபு நாயுடு மூன்று கேபினட் மற்றும் மூன்று இணை அமைச்சர் பதவிகளைக் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில் சுகாதாரம், ஊரக வளர்ச்சி, போக்குவரத்து, வேளாண்மை, ஐ.டி, மற்றும் நீர்வளம் ஆகிய துறைகளை அவர் பெற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவும் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் மேலும் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் குறைந்தபட்ச பொதுசெயல் திட்டம் வகுக்க வேண்டும் என்று நிதிஷ்குமார் நிபந்தனை விதித்துள்ளார்.
அத்துடன், மூன்று கேபினட் மற்றும் இரண்டு இணை அமைச்சர் என மொத்த ஐந்து அமைச்சர் பதவிகளை வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
கர்நாடகாவில் இரண்டு எம்.பிக்களை வைத்துள்ள மதச்சார்பற்ற ஜனதாதளம் வேளாண்துறை அமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என கோரியுள்ளது.
பீகாரில் 5 தொகுதிகளை வென்ற சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தியும் அமைச்சரவையில் இடம்பெற நிபந்தனை விதித்துள்ளது.
இந்த தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |