நம்பிக்கையான உலக தலைவர்கள் பட்டியல்.., டிரம்பை பின்னுக்கு தள்ளி மோடி முதலிடம்
நம்பிக்கையான உலக தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதல் இடம் பிடித்துள்ளார்.
மோடிக்கு முதலிடம்
சமீபத்தில் உலக தலைவர்களில் நம்பிக்கையான தலைவர் யார் என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதாவது, ஒவ்வொரு நாட்டு தலைவரும் எப்படி நடந்து கொள்கிறார் என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
மேலும், தலைவருக்கு அவரது சொந்த நாட்டில் எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்றும், உலக நாடுகளில் அந்த தலைவருக்கு எந்த அளவுக்கு மரியாதை இருக்கிறது என்றும் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு நாட்டு தலைவரும் எந்த அளவுக்கு நம்பகத்தன்மையுடன் நடந்து கொள்கிறார்கள் என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்கான மதிப்பீடு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதில் முதலிடம் பிடித்த 8 தலைவர்களின் பட்டியலும், அவர்களுக்கு கிடைத்த புள்ளி விவரங்கள் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளார். இதில் 100 மதிப்பெண்களுக்கு 75 மதிப்பெண்களை பெற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார்.
இரண்டாவது இடத்தில் 59 மதிப்பெண்கள் பெற்று தென் கொரிய அதிபர் லி ஜோ மியுங்க் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் அர்ஜென்டினா அதிபர் ஜாவிஸ் இருக்கிறார்.
இந்த ஆய்வு அறிக்கையை பாஜக தலைவர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |