மூன்றாவது முறையாக பிரதமரான மோடியின் முதல் கையெழுத்து: விவசாயிகள் மகிழ்ச்சி
மூன்றாவது முறையாக பிரதமரான மோடி விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடு கோப்பில் முதல் கையெழுத்திட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் முதல் கையெழுத்து
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியமைத்திருக்கும் நிலையில் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றார்.
பிரதமராக நேற்று மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவி ஏற்று கொண்ட பின்னர் அவரை தொடர்ந்து 72 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
இந்நிலையில், நாடு முழுவதிலும் உள்ள 9.3 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.20,000 கோடி தொகையை பிரதமர் மோடி விடுவித்தார்.
விவசாயிகளுக்கு 17வது தவணையை விடுவிக்கும் கோப்புகளில் பிரதமர் மோடி முதல் கையெழுத்திட்டார் என்ற செய்தி விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, "முதல் நடவடிக்கை விவசாயிகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டிருப்பதன் மூலம், விவசாயிகளுக்கு வாழ்வுக்காக எங்கள் அரசு முழு அர்ப்பணிப்புடன் இருப்பதை காட்டுகிறது. வருங்காலத்தில் விவசாயிகள், விவசாயத் துறைக்காக அதிகம் உழைக்கவிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |