கண்ணீருடன் விடைபெற்ற சுனில் சேத்ரி! நீங்கள் கால்பந்தின் ஜாம்பவான் என வாழ்த்திய குரோஷிய மூத்த வீரர்
இந்திய கால்பந்து அணித்தலைவர் சுனில் சேத்ரியின் ஓய்வுக்கு குரோஷிய மூத்த வீரர் லூகா மோட்ரிக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சுனில் சேத்ரி ஓய்வு
39 வயதாகும் சுனில் சேத்ரி தனது கால்பந்து வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார்.
அதன்படி உலகக்கிண்ண தகுதிச்சுற்றில் குவைத் அணிக்கு எதிரான போட்டியில் கடைசியாக சேத்ரி களம் கண்டார்.
போட்டி கோல்கள் இன்றி டிராவில் முடிந்ததைத் தொடர்ந்து சுனில் சேத்ரி கனத்த இதயத்துடன் விடைபெற்றார்.
மோட்ரிக் வாழ்த்து
அவருக்கு குரோஷியாவின் மூத்த வீரரான லூகா மோட்ரிக், போட்டிக்கு முன் காணொளி ஒன்றை வெளியிட்டு வாழ்த்து கூறினார்.
அவரது வாழ்த்து பதிவில், ''வணக்கம் சுனில், தேசிய அணிக்கான உங்கள் கடைசி ஆட்டத்தில் உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் இந்த விளையாட்டின் ஜாம்பவான். உங்கள் அணியினருக்கு, கடைசி ஆட்டத்தை நீங்கள் மறக்க முடியாததாக ஆக்குவீர்கள் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள் மற்றும் கேப்டனாக வெற்றி பெற வேண்டும்'' என தெரிவித்தார்.
151 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் சேத்ரி 94 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |