சரவெடி ஆட்டமாடிய மொயீன் அலி: ஆன்டிகுவா அபார வெற்றி
Moeen ali blast 56 runs in caribbean premier league 2026: கரீபியன் டி20 போட்டியில் ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்த கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில், ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸை வீழ்த்தியது.
மொயீன் அலி வாணவேடிக்கை
ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணிகள் மோதிய போட்டி சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.
முதலில் ஆடிய ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணியில் ரகீம் கார்ன்வால் டக்அவுட் ஆனார். அதன் பின்னர் கரிமா கோர் 27 ஓட்டங்கள் எடுத்தார். ஹசன் நவாஸ் 7 ஓட்டங்களில் வெளியேற, ஆமிர் ஜான்கூ 26 ஓட்டங்கள் எடுத்து மோட்டி பந்துவீச்சில் அவுட் ஆனார்.
எனினும் அணித்தலைவர் மொயீன் அலி (Moeen Ali) சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார். இதன்மூலம் சரிவில் இருந்து மீண்ட அணி 155 ஓட்டங்கள் எடுத்தது.
கடைசிவரை களத்தில் நின்ற மொயீன் அலி 37 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 56 ஓட்டங்கள் விளாசினார். ஷாமர் ஸ்ப்ரிங்கர் 19 ஓட்டங்கள் எடுத்தார்.
ஆன்டிகுவா வெற்றி
அடுத்து களமிறங்கிய பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி 18 ஓவர்களில் 125 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
இதன்மூலம் ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக ரிவால்டோ கிளார்க் 27 ஓட்டங்களும், கெவ்லோன் ஆண்டர்சன் 22 ஓட்டங்களும் எடுத்தனர். ஜோஷுவா ஜேம்ஸ் 3 விக்கெட்டுகளும், அல்ஸாரி ஜோஸப், ஷதாப் கான் மற்றும் சுஃபியான் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |