பிரித்தானிய குடியுரிமை வைத்திருக்கும் மனைவி..பாஸ்போர்ட்டிற்கு காத்திருக்கும் பாகிஸ்தான் வீரர்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஆமிர், ஐபிஎல் தொடரில் விளையாட பிரித்தானிய பாஸ்போர்ட்டிற்காக காத்திருக்கிறார்.
முகமது ஆமிர்
பாகிஸ்தான் கிரிக்கெட்டின் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் (Mohammad Amir).
32 வயதான ஆமிர் கடந்த 2016ஆம் ஆண்டில் வழக்கறிஞரான நர்ஜிஸை திருமணம் செய்துகொண்டார்.
நர்ஜிஸ் ஆமிர் பிரித்தானிய குடியுரிமை வைத்துள்ளார். ஆனால் ஆமிரிடம் பிரித்தானிய பாஸ்போர்ட் இல்லாததால் அதற்காக விண்ணப்பித்து காத்திருக்கிறார்.
2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் பிரித்தானிய பாஸ்போர்ட் கிடைக்கும் என்று ஆமிர் நம்புகிறார். அவ்வாறு அவருக்கு பாஸ்போர்ட் கிடைக்கும் பட்சத்தில், பிரித்தானிய குடிமகனாக ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாட தகுதிபெறுவார்.
பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை
ஏனெனில், அவர் பிசிசிஐயினால் பாகிஸ்தான் குடிமகனாக கருதப்பட மாட்டார். இதற்கு காரணம் பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் தொடரில் விளையாட தடை உள்ளது.
ஆமிர் பிரித்தானிய பாஸ்போர்ட்டை பெற்றுவிட்டால் 2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடலாம். அவர் RCB அணியில் விளையாட விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்பு அஸார் மஹ்மூத் என்ற பாகிஸ்தான் வீரர், பிரித்தானிய பாஸ்போர்ட்டின் அடிப்படையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார்.
அவர் 2011ஆம் ஆண்டில் பிரித்தானிய பாஸ்போர்ட்டை எடுத்து, 2012 மற்றும் 2013ஆம் ஆண்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் 2015யில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |