இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை கைது செய்ய கோரி மனைவி மீண்டும் மனு தாக்கல்!
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை கைது செய்ய கோரிக்கை வைத்தும், செஷன்ஸ் நீதிமன்றம் விதித்த தடையை நீக்கவும் உச்ச நீதிமன்றத்தில் அவரது மனைவி ஹசின் ஜஹான் மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷமியின் மனைவி மீண்டும் மனு தாக்கல்
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிதின் மனைவி ஹசின் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், தன்னிடம் வரதட்சணை கேட்பதாகவும், அவர் பல பெண்களிடம் சட்டவிரோத உறவுகளில் ஈடுபட்டதாகவும் கூறினார்.
கடந்த ஜனவரி மாதம் இந்த மனு மீதான விசாரணை, கொல்கத்தா நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது, இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஷமி ஜஹானுக்கு மாத ஜீவனாம்சமாக ₹50,000 வழங்க உத்தரவிட்டனர்.
கடந்த 2019-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் ஷமிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்டை நிறுத்தி வைத்தது. மேலும் ஷமி மீதான குற்ற விசாரணைக்கு தடை விதித்தது.
இந்நிலையில், செஷன்ஸ் நீதிமன்றம் விதித்த தடையை நீக்கவும் உச்ச நீதிமன்றத்தில் ஜஹான் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், இந்திய கிரிக்கெட் வீரர் ஷமி, பிசிசிஐ சுற்றுப்பயணங்களின் போது, ஹோட்டல் அறைகளில் பாலியல் விவகாரங்களில் ஈடுபட்டார். விபச்சாரிகளுடன் தொடர்பு கொள்ள ஷமி தனது 2வது மொபைல் ஃபோனைப் பயன்படுத்தினார்.
இந்த குற்றம் தொடர்பாக கொல்கத்தாவின் லால் பஜார் பொலிசார் அவரது தொலைபேசியைக் கைப்பற்றினர். ஷமி இன்னும் விபச்சாரிகளுடன் பாலியல் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 4 ஆண்டுகளாக, வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
வழக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஷமி விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. ஜாமீன் கோரி விண்ணப்பிக்கவும் இல்லை என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.