நான் ஓய்வு பெற போகிறேன்... சீக்கிரம் வேறொருவரை உருவாக்குங்க! இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த வீரர்
இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, தான் சீக்கிரகே ஓய்வு பெறப்போவதாக கூறியிருப்பது, ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடர் காரணமாக பல திறமை வாய்ந்த வீரர்களை, இந்தியா அடையாளம் கண்டு சிறப்பான வீரர்களை உருவாக்கி வருகிறது. அதன் காரணமாகவே இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வித போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறது.
சமீப ஆண்டுகளாக இந்திய அணிக்கு பல திறமை வாய்ந்த வீரர்கள் கிடைத்துவிட்டனர். ஆனால், சிலர் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாட துவங்கிய வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமி, தான் விரைவில் ஓய்வு பெற்றுவிடுவேன் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், நான் பல வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறேன். எப்பொழுதெல்லாம் என்னிடம் இளம் வீரர்கள் வந்து ஆலோசனை கேட்கிறார்களோ அப்போதெல்லாம் எனக்குத் தெரிந்த அனைத்து விவரங்களையும் நான் சொல்லி விடுவேன்.
மேலும் நான் எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெற வாய்ப்பு உள்ளது. அதனால் எனது இடத்திற்கு விளையாடும் மற்றொருவரை உருவாக்க விரும்புகிறேன்.
இதற்காக இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தொடர்ச்சியாக ஆலோசனையும் வழங்கி வருகிறேன். எனது ஓய்வு அறிவிப்பை வெளியிடும் போது இந்திய அணிக்காக மாற்று வீரர் தயார் நிலையில் இருப்பார் என்று நம்புவதாக கூறியுள்ளார்.
மொகமது ஷமியை பொறுத்தவரை இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த வேகப்பந்து வீச்சாளர், இவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசக் கூடியவர் என்பதால், இவரின் இந்த முடிவு ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியாகவே உள்ளது.