ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் போதாது! முகமது ஷமியின் முன்னாள் மனைவி வழக்கு
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் முன்னாள் மனைவி ஜீவனாம்சம் கேட்டு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
முகமது ஷமியின் ஜீவனாம்ச வழக்கு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கும் அவரது முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் இருவருக்கு இடையிலான ஜீவனாம்சம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் தொடர்ந்த இந்த வழக்கில், தற்போது வழங்கப்பட்டு வரும் ஜீவனாம்சம் தொகையை அதிகரித்து தரச் சொல்லி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக நான்கு வாரங்களில் பதிலளிக்க கோரி முகமது ஷமிக்கும் மற்றும் மேற்கு வங்க அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.
4 லட்சம் ஜீவனாம்சம் போதாது!
உச்ச நீதிமன்ற வழக்குக்கு முன்னதாக, கொல்கத்தா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, பிரிந்த முன்னாள் மனைவி ஹசின் ஜஹானுக்கு மாதம் ரூ.1.5 லட்சம் மற்றும் அவரின் மகள் பராமரிப்புச் செலவிற்காக கூடுதலாக ரூ.2.5 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

ஆனால் தற்போது வழங்கப்படும் ரூ.4 லட்சம் ஜூவனாம்சம் தற்போதைய சூழ்நிலைகளுக்கு போதாது என்று முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் மேற்கு வங்க உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |