100வது கோல் அடித்த நட்சத்திர வீரர்! பிரீமியர் லீக்கில் லிவர்பூல் அபார வெற்றி
ப்ரீமியர் லீக் தொடரில் லிவர்பூல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ப்ரெண்ட்போர்டு அணியை வீழ்த்தியது.
அசத்தலான கோல்
Anfield மைதானத்தில் ப்ரீமியர் லீக் தொடர் ஆட்டத்தில் லிவர்பூல் மற்றும் ப்ரெண்ட்போர்டு அணிகள் மோதின. ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரர் முகமது சாலா அசத்தலாக கோல் அடித்தார்.
அதன் பின்னர் ப்ரெண்ட்போர்டு வீரர்கள் பதில் கோல் அடிக்க தீவிரமாக முயற்சித்தனர். ஆனால், லிவர்பூல் அணியின் தடுப்பினை அவர்களால் உடைக்க முடியவில்லை.
100வது கோல்
இதனால் லிவர்பூல் அணி இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் ப்ரெண்ட்போர்டு அணியை வீழ்த்தியது. முகமது சாலா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இது லிவர்பூல் அணிக்கு ப்ரீமியர் லீக்கில் 18வது வெற்றி ஆகும்.
Premier League
எகிப்தை சேர்ந்த முகமது சாலா Anfield மைதானத்தில் லிவர்பூல் அணிக்காக 100வது கோல் அடித்தார். இந்த மைல்கல்லை எட்டிய 8வது வீரர் சாலா ஆவார்.
அத்துடன் தொடர்ச்சியாக லிவர்பூல் அணிக்காக சொந்த மைதானத்தில் 9 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
Twitter/@PremierLeague