புற்றுநோயை வென்ற அமெரிக்காவின் முதல் பெண்மணி! வெற்றிகரமாக முடிக்கப்பட்ட அறுவை சிகிச்சை
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவிக்கு இருந்த புற்றுநோய் திசுக்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜில் பைடன்
ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு வழக்கமான தோல் புற்றுநோய் பரிசோதனையின்போது, அவரது வலது கண்ணிற்கு மேல் சிறிய காயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை அகற்ற மோஸ் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி அவருக்கு புற்றுநோய் திசுக்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
@Ting Shen | Xinhua News Agency | Getty Images
வெள்ளை மாளிகை தகவல்
இதனால் அமெரிக்காவின் முதல் பெண்மணி ஆபத்தில் இருந்து மீண்டுவிட்டதாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஜனாதிபதியின் மருத்துவர் கெவின் ஓ'கானர் கூறுகையில், 'முதல் பெண்மணி முகத்தில் சில வீக்கம் மற்றும் சிராய்ப்புகளை அனுபவித்து வருகிறார். ஆனால் அவர் நல்ல மனநிலையில் இருக்கிறார் மற்றும் நன்றாக உணர்கிறார்' என தெரிவித்துள்ளார்.
@Susan Walsh/AP