நாட்டை விட்டு வெளியேறிய ஈரானிய உச்சத் தலைவர் மொஜ்தபா காமேனி? சவுதி ஊடகம் தகவல்
ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டை விட்டு வெளியேறிய உச்சத் தலைவர்
ஈரான் - அமெரிக்கா இடையே போர் தாக்குதல் தீவிரமடைந்து இருக்கும் இந்த சூழ்நிலையில், ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி ஈரான் நாட்டிற்கு வெளியே இருப்பதாக சவுதி அரேபியாவின் Al Hadath செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இந்த தகவலை Al Hadath செய்தி நிறுவனம் இஸ்ரேலிய பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், உச்சத் தலைவர் மொஜ்தபா காமேனி பெயரில் வெளியாகும் எந்தவொரு அறிக்கையும், செய்திகளும் அவர் எழுதியது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனியை குறிவைத்து அமெரிக்க நடத்திய தாக்குதலுக்கு பிறகு, புதிய உச்சத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மொஜ்தபா காமேனி பெயரில் வெளிவரும் அனைத்து செய்திகளும் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் தலைவர் அகமது வஹிதி மற்றும் முக்கிய பிற அதிகாரிகளால் எழுதப்படுவது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவெளியில் இருந்து தலைமறைவு

அதே நேரத்தில் ஈரான் தலைநகர் தெஹ்ரான் முழுவதும் முஜ்தபா காமேனியின் உருவம் பொறித்த பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தாலும் அவர் நாட்டின் உச்சத் தலைவராக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை.
குறிப்பாக அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்ட அவரது தந்தை மற்றும் நாட்டின் உச்சத் தலைவரான அயதுல்லா அலி காமேனி மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் இறுதிச் சடங்கில் கூட முஜ்தபா காமேனி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |