போர் எல்லைகளின்றி விரிவடையும் - அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை
mojtaba khamenei warns war will expande beyond boundries: அமெரிக்கா மீண்டும் தாக்கினால் போர் எல்லைகளின்றி விரிவடையும் என ஈரானின் உச்சத்தலைவர் மொஜ்தபா கமெனி எச்சரித்துள்ளார்.
ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா
அமெரிக்காவில் வரும் நவம்பர் 3 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் முடிவடைந்த பின்னர் ஈரான் மீது தீவிர தாக்குதலை மேற்கொள்வது தொடர்பாக ட்ரம்ப் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு ஈரான் பதிலடி கொடுக்கும் என்பதால், அதனை எதிர்கொள்ள மத்திய கிழக்கில் உள்ள தனது நட்பு நாடுகளை தயார் நிலையில் இருக்குமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், ஈரானின் உச்சத்தலைவர் மொஜ்தபா கமெனி, ஈரானின் ஆயுதப் படைகளின் மூத்த தளபதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
மொஜ்தபா கமெனி எச்சரிக்கை
இந்த சந்திப்பில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீண்டும் போரை தொடங்கினால், அதற்கு உடனடியான, தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் புவியியல் ரீதியாக வரம்பற்ற பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்க சியோனிச எதிரியின் அனைத்து வகையான சொத்துக்களும் ஆயுதப் படைகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படுவதை உறுதிசெய்யும் வகையில், இராணுவ இலக்குகள் தரவுத்தளம் முழுமையாகப் புதுப்பிக்கப்பட வேண்டும்.
Any level or type of threat must be met with an immediate, impactful, and geographically unrestricted response.
— Ayatollah Mojtaba Khamenei (@MKhamenei_ir) October 31, 2026
ஈரானின் எதிரிகள் மீண்டும் இராணுவ அல்லது பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடங்கினால், அந்தத் தாக்குதல்கள் எப்போது, என்ன நிபந்தனைகளின் கீழ் முடிவுக்கு வரும் என்பதை இஸ்லாமியக் குடியரசின் ஆயுதப் படைகளும் ஈரானிய தேசமுமே தீர்மானிக்கும்" என தெரிவித்துள்ளார்.
மீண்டும் அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து தாக்குதலை தொடங்கினால், போர் மத்திய கிழக்கை தாண்டி விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.