எரிவாயு தட்டுப்பாடு... ஸ்தம்பிக்கும் ஒரு ஐரோப்பிய பிராந்தியம்
ஐரோப்பிய நாடான மால்டோவாவின் டிரான்ஸ்னிஸ்ட்ரியா பிராந்தியத்தில் இன்னும் ஒருசில நாட்களுக்கு மட்டுமே எரிவாயு போதுமானதாக உள்ளது என அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் தீர்வு
மால்டோவா அரசாங்கம் உதவ முன்வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் மால்டோவாவின் பிரதமர் தெரிவிக்கையில், ரஷ்ய எரிவாயு உற்பத்தியாளரான காஸ்ப்ரோம் புதிய எரிவாயு விநியோகத்தை தொடங்கினால் மட்டுமே இந்த விவகாரத்தில் தீர்வு காண முடியும் என்றார்.
அல்லது ரஷ்ய சார்பு பிரிவினைவாதப் பகுதியான டிரான்ஸ்னிஸ்ட்ரியா, ஐரோப்பிய சந்தைகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவிற்கு பணம் செலுத்த ஒப்புக்கொள்ள வேண்டும் என்றார்.
சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்தபோது மால்டோவாவிலிருந்து பிரிந்த டிரான்ஸ்னிஸ்ட்ரியா உக்ரைன் வழியாக ரஷ்ய எரிவாயுவை நீண்ட காலமாகப் பெற்று வந்தது. ஆனால் ரஷ்யாவுடன் கிட்டத்தட்ட மூன்று வருட போரில் சிக்கியுள்ள உக்ரைன், எரிவாயு போக்குவரத்து ஒப்பந்தத்தை நீட்டிக்க மறுத்துவிட்டது.
மால்டோவாவின் அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பெரும்பாலான மின்சாரத்தை வழங்கும் ஒரு ஆலையை இயக்கவும் இந்த எரிவாயு பயன்படுத்தப்பட்டது. தற்போது எரிவாயு தடைபட்டுள்ள நெருக்கடியான சூழலில்,
பழிவாங்கும் நடவடிக்கை
குளிர்காலத்தில் வெப்பத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயன்ற பிராந்தியத்தின் 350,000 குடியிருப்பாளர்களில் பலர் தீ மற்றும் கார்பன் மோனாக்சைடு விஷத்தால் நோய்வாய்ப்பட்டனர் அல்லது இறந்து கொண்டிருப்பதாக டிரான்ஸ்னிஸ்ட்ரியா பிராந்தியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, மால்டோவா அதிகாரிகளின் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டதாகவும் அதிக விலை கொண்ட ஐரோப்பிய எரிவாயுவை வாங்குவது என முடிவுக்கு வந்துள்ளதகாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், 5 நாட்கள் கடந்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என்றும், மால்டோவா பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டு நெருக்கடி நிலையை உணர் வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |