ஒரே நேரத்தில் கருத்தரித்த 53 வயது தாய் மற்றும் 31 வயது மகள்! குழந்தையே பிறக்காது என கூறிய நிலையில் நடந்த ஆச்சரிய சம்பவம்
அமெரிக்காவில் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் கருத்தரித்த 53 வயது தாயும், அவரின் 31 வயது மகளும் ஆளுக்கு ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ள ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.
Kelsi Pierce (31) என்ற பெண்ணுக்கும் Kyle என்பவருக்கும் கடந்த 2016ல் திருமணம் நடந்தது.
பின்னர் குழந்தை பெற்று கொள்ள தம்பதி முயற்சித்து வந்த நிலையில் Kelsiஆல் கருத்தரிக்க முடியவில்லை.
குழந்தையின்மை பிரச்சினையால் மிகுந்த வேதனையில் இருந்த Kelsi மருத்துவ பரிசோதனைகள் செய்த நிலையில் அவர் கர்ப்பமாகவே முடியாமல் போகலாம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
இதையடுத்து Kelsiக்காக வாடகை தாயாக இருக்க அவரின் தாயார் Rutherford முடிவு செய்தார். அதன்படி அவர் கரு பரிமாற்றம் செய்து கர்ப்பமானார். Rutherford கருத்தரித்த அடுத்த மாதத்தில் நம்பமுடியாத வகையில் Kelsiம் கர்ப்பமானார்.
இந்த நிலையில் இருவருக்கும் சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இது குறித்து Kelsi கூறுகையில், எனக்கு குழந்தை பிறக்காது என மருத்துவர்கள் கூறியது வேதனையளித்தது.
எப்போதும் நான் தாயாக விரும்பினேன். ஆனால் பின்னர் நான் கர்ப்பமானது எனக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.
என் தாயார் எனக்காக வாடகை தாயாக மாறினார், அவர் வயதை நினைத்து நான் பயந்தேன்.
ஆனால் மருத்துவர்கள் உதவியால் பாதுகாப்பாக பெண் குழந்தையை அவர் பெற்றெடுத்துவிட்டார் என கூறியுள்ளார்.
ரு பரிமாற்றம் செய்து கர்ப்பமானார். Rutherford கருத்தரித்த அடுத்த மாதத்தில் நம்பமுடியாத வகையில் Kelsiம் கர்ப்பமானார்.
