வெறும் 10 மணிநேர இடைவெளியில்... புற்றுநோயால் அவதிப்பட்டுவந்த தாயாரும் மகளும் மரணம்
Mom and her daughter die from cancer: தாயாரும் அவரது மகளும் புற்றுநோயால் மரணமடைந்துள்ளனர்.
தாயும் மகளும் வெறும் 10 மணிநேர இடைவெளியில் புற்றுநோயால் மரணமடைந்ததையடுத்து, ஒரு குடும்பமே மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அரிதான புற்றுநோய்
28 வயதான சிபெலே மார்சிஸ், பிரேசிலின் மோகி குவாசுவில் உள்ள ஒரு மருத்துவமனையில், உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை மாலை சுமார் 4 மணியளவில் மரணமடைந்தார்.

அவரது தாயாரான, 56 வயதான மரியா எலிசபெட் நோகுவேரா, நகரிலுள்ள மற்றொரு மருத்துவமனையில் மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் காலமானார்.
டிஜிட்டல் சந்தைப்படுத்துதல் நிபுணரான சிபெலேவுக்கு 2024-ல் அட்ரீனல் சுரப்பியில் தோன்றிய தீவிரமான மற்றும் அரிதான புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
சுமார் ஓராண்டுக்குப் பிறகு, பித்தப்பைக் கல் என்று தான் நினைத்திருந்த பிரச்சனைக்காக மருத்துவரைச் சந்தித்தபோது, தனக்குக் கணையப் புற்றுநோய் இருப்பது மரியாவுக்குத் தெரியவந்தது.
சிபெலே தனது புற்றுநோய்க்காகத் தொடர்ச்சியான அறுவை சிகிச்சைகள் மற்றும் கீமோதெரபி சிகிச்சைகளை மேற்கொண்டார்; இந்நிலையில், தொற்றுக்கு ஆளானதைத் தொடர்ந்து அவர் இறக்கும் தருவாயில் இருப்பதாக 2025 டிசம்பரில் மருத்துவர்கள் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.
வாழ்க்கையின் மிக மோசமான கட்டத்தில் அந்த தாயாரும் மகளும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தனர் என்றே அவர்களுக்கு நெருக்கமானவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நோய் வேகமாகப் பரவிய பிறகு, மரியா தனது புற்றுநோய்க்கான சிகிச்சையை அதே அளவில் பெறவில்லை.
மரியாவின் வலி மிகவும் மோசமடைந்ததால், அவருக்கு மார்பின் (morphine) தேவைப்பட்டது. அவர் செப்டம்பர் 17 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அச்சமயத்தில், சிபெலே தனது தாயைச் சந்திக்கச் சென்றிருந்தார்.
ஒன்றாக அடக்கம்
ஆனால், சுமார் ஒரு வாரத்திற்குப் பிறகு சிபெலேவின் உடல்நிலை மோசமடைந்தது; அதனால் அவருக்கு மருத்துவச் சிகிச்சை தேவைப்பட்டது.

அவர் அடிக்கடி தனது தாயுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார்; அவர்களின் இறுதி நாட்களுக்கு முன்பு இருவரும் நிறைய பயணம் செய்ததாகவே கூறப்படுகிறது.
சிபெலே மற்றும் மரியா ஆகிய இருவரும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ, ஒரு கூட்டு இறுதிச் சடங்கின் மூலம் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.