சொந்த பிள்ளைகள் மூவரை கொன்று விட்டு தாயார் எடுத்த முடிவு... அவருக்கே வினையான சம்பவம்
அமெரிக்காவில் தாயார் ஒருவர் தமது மூன்று பிள்ளைகளையும் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, குடியிருப்பின் மாடியில் ஏறி குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலைக்கு முயன்ற தாயார்
அமெரிக்காவின் Massachusetts மாகாணத்தில் நடந்த இச்சம்பவத்தில், தற்கொலைக்கு முயன்ற அந்த தாயாரின் இடுப்புக்கு கீழ் மொத்தமாக ஸ்தம்பித்துப் போயுள்ளது. 32 வயதான லிண்ட்சே கிளான்சி மீது தற்போது தமது மூன்று பிள்ளைகளை கழுத்தை நெரித்து கொன்றது தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளது.
Credit: facebook
அவர் ஏற்கனவே மகப்பேறுக்கு பிறகான மனச்சோர்வு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார் எனவும், மரணத்தை தெரிவு செய்யும் முன்னர் தம்மை காப்பாற்ற வேண்டும் என மருத்துவர்களிடமும் கெஞ்சி வந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.
Credit: facebook
கால்களை அசைக்க முடியாது
இந்த நிலையில் தான் ஜனவரி 24ம் திகதி, தமது மணிக்கட்டை அறுத்துக்கொண்டு குடியிருப்பின் மேல் மாடியில் இருந்து குதித்துள்ளார். இதில் அவர் படுகாயங்களுடன் மீட்கப்பட, அவர் நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் எனவும், இனி ஒருபோதும் அவரால் தமது கால்களை அசைக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Credit: facebook
அவருக்காக, அவரது கணவர் பொதுமக்களிடம் இருந்து இதுவரை 1 மில்லியன் டொலர் வரையில் திரட்டியுள்ளார்.
ஆனால் அந்த தொகையில் இருந்து அவருக்கான நீதிமன்ற செலவுகளை முன்னெடுக்கவில்லை எனவும், மருத்துவ செலவுகளுக்காக மட்டுமே பயன்படுத்தப் படுவதாகவும் அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.