750 பவுண்டுகளுக்காக பெற்ற மகளை சூனியக்காரரிடம் விற்ற பெண்
தென்னாப்பிரிக்காவில், உடல் உறுப்புகளுக்காக, பெற்ற மகளை சூனியக்காரரிடம் விற்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காணாமல் போன சிறுமி
2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஜோஷ்லின் என்னும் ஆறு வயது சிறுமி காணாமல் போனாள்.
பொலிசாருடன் இணைந்து பொதுமக்களும் ஜோஷ்லினைத் தேடியும் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
பகீர் தகவல்
இந்நிலையில், ஜோஷ்லினின் தாயாகிய கெல்லி (33) மீது அவரது பக்கத்துவீட்டுப் பெண்ணான லோரென்ஷியா பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார்.
தான் தன் மகளை சூனியக்காரர் ஒருவரிடம் விற்றுவிட்டதாக கெல்லி கூற, ஜோஷ்லினின் ஆசிரியை ஒருவரும், ஜோஷ்லின் ஒரு கப்பலில், ஒரு கன்டெய்னரில் இருப்பதாகவும், மேற்கு ஆப்பிரிக்கா நோக்கி அவள் செல்வதாகவும் கெல்லி தன்னிடம் கூறியதாக தெரிவிக்க, கெல்லி பொலிசாரிடம் சிக்கினார்.
விசாரணையில், ஜோஷ்லினுடைய கண்கள் மற்றும் தோலுக்காக, அவளை ஒரு சூனியக்காரர் கேட்டதாகவும், தான் 750 பவுண்டுகளுக்காக தன் மகளை விற்றுவிட்டதாகவும் கூறியுள்ளார் கெல்லி.
இந்த சூனியக்காரர்கள் சில நேரங்களில் தங்கள் பூஜைக்காக மனித உடல் உறுப்புகளை பயன்படுத்துவதுண்டாம். அப்படிப்பட்ட ஒருவரிடம்தான் தன் மகள் ஜோஷ்லினை விற்றிருக்கிறார் கெல்லி.
கெல்லிக்கும், அவளுடைய குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த அவரது காதலனான Jacquin Appollis மற்றும் வார்களுடைய நண்பரான Steveno van Rhyn ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், குழந்தை கெல்லி வழக்கில் மூவரும் குற்றவாளிகள் என தற்போது நீதிமன்றம் முடிவு செய்துள்ள நிலையில், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட உள்ளது.
என்றாலும், குழந்தை ஜோஷ்லின் என்ன ஆனாள், அவளை வாங்கிய சூனியக்காரர் யார் என்பது போன்ற விவரங்களை நீதிபதி வெளியிடவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |