அமைதியாக சைக்கிளில் சென்றுகொண்டிருந்த முதியவர்... கார் ஓட்ட கற்றுக்கொண்டிருந்த 12 வயது சிறுவன்: ஒரு திடுக் வீடியோ
அமைதியாக சாலையில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த ஒரு 60 வயது முதியவர், தான் காயங்களுடன் வீட்டுக்குப் போவேன் என சற்றும் எதிர்பார்த்திருக்கமாட்டார்.
ரஷ்யாவில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், முதியவர் ஒருவர் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்க, மின்னல் வேகத்தில் பக்கவாட்டில் இழுத்துக்கொண்டே வரும் ஒரு கார் அவர் மீது பயங்கரமாக மோதுவதையும், அவர் வீசி எறியப்படுவதையும் காணலாம். நடந்தது என்னவென்றால், ஒரு 12 வயது சிறுவனுக்கு அவனது தந்தை கார் ஓட்டக் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த அந்த முதியவர் மீது மோதியிருக்கிறது.
ஆனால், அதிர்ஷ்டவசமாக அவருக்கு பெரிய அடி ஒன்றும் இல்லையாம். அந்த இடத்திலேயே முதலுதவி கொடுக்கப்பட்டபின் அவர் வீடு திரும்பிவிட்டாராம்.
என்றாலும், கார் ஓட்டக் கற்றுக்கொடுத்த அந்த 12 வயது சிறுவனின் தந்தைக்கு பொலிசார் 30,000 ரூபிள்கள் அபராதம் விதித்துள்ளார்கள்.