குழந்தைகள் விரும்பி உண்ணும் சுவையான மோமோஸ்.., வீட்டிலேயே எப்படி செய்வது?
மோமோஸ் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு.
அந்தவகையில், குழந்தைகள் விரும்பி உண்ணும் சுவையான வெஜ் மோமோஸ் வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- மைதா-1கப்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
- இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 ஸ்பூன்
- பச்சைமிளகாய்-2
- வெங்காயம்-1
- மிளகுத்தூள்- 1 ஸ்பூன்
- முட்டைகோஸ்- ½ கப்
- கேரட் - ½ கப்
- சோயா சாஸ்- 2 ஸ்பூன்
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு சேர்த்து அதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு பிணைந்துகொள்ளவும்.
பின் ஒரு தாளிப்பு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்கு வதக்க வேண்டும்.
பின் அதில் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்.

இதனைத்தொடர்ந்து அதில் நறுக்கிய முட்டைகோஸ், கேரட் சேர்த்து வதக்கி சோயா சாஸ் மற்றும் கொத்தமல்லி இல்லை தூவி கிளறி இறக்கிவிடவேண்டும்.
பிணைந்து வைத்துள்ள மைதா மாவை வட்ட வடிவில் தேய்த்து செய்து வைத்த கலவையை இதில் வைத்து மோமோஸ் போல் மடிக்கவும்.
இறுதியாக இதனை இட்லி பாத்திரத்தில் 25 நிமிடம் வேகவைத்தால் சுவையான வெஜ் மோமோஸ் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |