இன்ப சுற்றுலா வந்தவர்களிடம் பணம் பறித்த பறக்கும் படையினர்! கண்ணீருடன் கதறும் வடமாநில பெண்
சுற்றுலா வந்த வடமாநில பெண்ணிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்ததால் இளம்பெண் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.
தேர்தல் பறக்கும் படையினர்
மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால் இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. இதனால் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் நீலகிரி மாவட்டம், குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை டபுள் ரோடு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தங்களது குழந்தைகளுடன் விமான நிலையத்தில் இருந்து வாடகை காரில் நீலகிரிக்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, அவர்களின் காரை நிறுத்து சோதனை செய்த பறக்கும் படையினர் அவர்களிடம் இருந்த 69400 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
இளம்பெண் கதறல்
இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கூறுகையில், "நாங்கள் பஞ்சாப் மாநிலத்திலிருந்து விமான மூலம் கோவை வந்தோம். அங்கிருந்து வாடகை காரில் ஊட்டிக்கு இன்ப சுற்றுலா வந்தோம்.
எங்களுக்கு இவ்வளவு பணம் கொண்டு வரக்கூடாது என்பது தெரியாது. எங்களது பணத்தை திரும்ப கொடுத்து விடுங்கள்" என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
இதில் தேர்தல் பறக்கும் படையினருக்கும் ஹிந்தி தெரியவில்லை என்பதால் இருதரப்பினரும் செய்வதறியாது குழம்பினர். பின்னர், அவர்களிடம் தேர்தல் காலங்களில் இதுபோன்ற பணத்தை எடுத்து வரக்கூடாது என்று அறிவுறுத்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |