வேடிக்கை காட்டும் விலங்குகளிலிருந்து பயங்கர விலங்குகளாக மாறி வரும் குரங்குகள்: ஒரு அதிரவைக்கும் வீடியோ
குரங்குகளை ஒரு காலத்தில் குட்டிக்கரணம் அடிக்கச் சொன்னால் அடிக்கும், வேடிக்கை காட்டும் அபாயமற்ற விலங்குகளாகத்தான் உலகம் கருதிவந்தது.
ஆனால்,சமீப காலமாக வெளியாகும் செய்திகள், அவை எவ்வளவு பயங்கரமான விலங்குகள் என்பதை நிரூபிப்பது போல் அமைந்துள்ளன.
இந்தியாவில் ஒரு குரங்குக் கூட்டம் நூற்றுக்கணக்கான நாய்களைத் தூக்கிச் சென்று உயரமான இடங்களிலிருந்து கீழே வீசிக் கொன்றதைக் குறித்த செய்திகள் வெளியாகின.
தாய்லாந்தில் சில இடங்களில் குரங்குகளின் அட்டகாசத்துக்கு அஞ்சி மக்கள் தெறித்து ஓடுவதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகின.
தற்போது, இங்கிலாந்தில் அப்படி ஒரு காட்சி வெளியாகியுள்ளது.
Cheshireஇலுள்ள வனவிலங்குகள் பூங்காவிற்கு தனது குடும்பத்துடன் சென்றுள்ளார் Bec Adamson (32). அப்போது அதிரவைக்கும் காட்சி ஒன்றைக் கண்ட அவரது தோழி அதை வீடியோ எடுத்துள்ளார்.
அந்த வன விலங்குகள் பூங்காவில், 20 அடி உயரமுள்ள மரத்தூண் ஒன்றில் உட்கார்ந்திருக்கும் ஒரு குரங்கு, வானத்தில் பறந்துகொண்டிருந்த seagull என்னும் பறவையை எட்டிப் பிடித்துள்ளது.
பிடித்த பறவையை, அந்தக் குரங்கு அந்த மரத்தூணில் பயங்கரமாக அடித்துக்கொல்வதை அந்த வீடியோவில் காணலாம்.
அந்தப் பறவைக் கொன்று, கையில் வழியும் அதன் இரத்தத்தைச் சுவைத்த அந்த குரங்கு, பிறகு கீழே இறங்கி அந்தப் பறவையை சுவைத்து உண்டுள்ளது.
ஆக, குரங்குகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளமுடியாது என்பதற்கு உதாரணமாக செயல்பட்டுள்ளது அந்தக் குரங்கு!