கனடாவில் மங்கி பாக்ஸ் பரவல்.. 10க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு!
கனடாவில் சந்தேகத்திற்குரிய குரங்கு காய்ச்சலால் பத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டது குறித்து விசாரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரிய தொற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை உறுதிப்படுத்திய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சுகாதார அதிகாரிகள், உலகளாவிய அளவில் ஒரு பரவலான பரவல் நிகழக்கூடும் என்று பரிந்துரைத்து இருக்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து, கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள மாண்ட்ரீல் நகரில் 13 பேருக்கு மங்கி பாக்ஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொத்தாக ரஷ்யாவிடம் சரணடைந்த உக்ரேனிய ராணுவ வீரர்கள்!
கிட்டதட்ட 13 பேருக்கு சந்தேகத்திற்குரிய மங்கி பாக்ஸ் தொற்று பாதிப்பு இருப்பதாக நகரில் உள்ள மருத்துவர்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து மாண்ட்ரீல் பொது சுகாதார அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆய்வக உறுதிப்படுத்தல் பணிகள் நடந்து வரும் நிலையில் இது குறித்த அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.