கொத்தாக ரஷ்யாவிடம் சரணடைந்த உக்ரேனிய ராணுவ வீரர்கள்!
கடந்த 24 மணி நேரத்தில் 700 உக்ரைன் போராளிகள் சரணடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் எஃகு ஆலையில் பதுங்கியிருந்த மொத்தம் 694 உக்ரைன் வீரர்கள் சரணடைந்துள்ளதாக ரஷ்யாவின் அரச செய்தி நிறுவனமான RIA தெரிவித்துள்ளது.
அசோவ்ஸ்டல் ஆலை மரியுபோலில் நகரில் உக்ரைன் வீரர்கள் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி பெரிய கோட்டையாகக் கருதப்பட்டது, சமீபத்திய வாரங்களில் அங்கு கடுமையான சண்டைகள் நடந்தன.
இந்நிலையில், உக்ரைனின் ஆயுதப்படையைச் சேர்ந்த 950 க்கும் மேற்பட்ட வீரர்கள் திங்கள்கிழமை முதல் சரணடைந்துள்ளனர், அவர்களில் 80 பேர் காயமடைந்துள்ளனர் என்று RIA கூறியுள்ளது.
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கைது!
எவ்வாறாயினும், உக்ரைன் தனது வீரர்கள் ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்டு எதிரிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறியுள்ளது.
முன்னதாக, உக்ரைனின் துணை பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹன்னா மாலியார், வீரர்களை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், இன்னும் ஆலைக்குள் இருக்கும் வீரர்களை மீட்பதற்கான திட்டங்கள் இருப்பதாகவும் கூறினார்.