monkeypox பரவல்.. அமெரிக்காவில் மூன்றாவது மாகாணம்: கட்டாய தனிமைப்படுத்தல் விதிப்பு
அமெரிக்காவில் புதிதாக புளோரிடா மாகாணத்தில் monkeypox பரவல் உறுதி செய்யப்பட்ட நிலையில், கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
புளோரிடா மாகாணத்தில் ப்ரோவர்ட் கவுண்டி பகுதியிலேயே தற்போது புதிதாக ஒருவருக்கு குரங்கம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் வெளிநாடு பயணம் மேற்கொண்டவர் என மாகாண சுகாதாரத்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனையடுத்து அந்த நபர் தற்போது கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சோதனை அறிக்கைகள் மிக விரைவில் வெளியாகும் எனவும், வேறு எவருக்கும் மாகாணத்தில் இதுவரை monkeypox தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றே கூறப்படுகிரது.
அமெரிக்காவில் முதல் குரங்கம்மை தொற்றானது மே 18ம் திகதி மாசசூசெட்ஸில் பதிவாகியது. அடுத்த நாள், இரண்டாவது ஒருவக்கு நியூயார்க் நகரில் பதிவாகியது. இந்த நிலையில் தற்போது மூன்றாவது மாகணமாக புளோரிடாவில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ படைன் குரங்கம்மை நோய் தொடர்பில் எந்த அளவுக்கு கவலை கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடம் விவவியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பா நாடுகளில் மட்டும் இதுவரை 100கும் மேற்பட்டவர்களுக்கு குரங்கம்மை நோயானது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.