இரண்டு மாத குழந்தையை தூக்கிச் சென்ற குரங்குகள்.., கடைசியில் ஏற்பட்ட விபரீதம்
பச்சிளம் குழந்தையை தூக்கிச் சென்ற குரங்குகளால் நிகழ்ந்த விபரீத சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
குரங்குகளால் ஏற்பட்ட விபரீதம்
இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் பல்வேறு பகுதிகளில் குரங்குகளின் தொல்லையால் பொதுமக்கள் பெரிதளவில் பாதிக்கப்படுவதால் அம்மாநில அரசு அதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது.
அதாவது குரங்குகளுக்கு தேவையான உணவு கிடைக்காத காரணத்தினால் அவை பொதுமக்கள் இருக்கும் பகுதிகளை நோக்கி படையெடுப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சீதாபூரை அடுத்த சூரஜ்பூர் கிராமத்தில் உள்ள இரண்டு மாத ஆண் குழந்தையை தூக்கிச் சென்ற குரங்குகள் நீர் நிரம்பியப் பீப்பாயில் போட்டுள்ளன.
பின்னர் குழந்தையை காணவில்லை என்று பெற்றோர்கள் தேடிய போது தண்ணீர் நிரம்பியப் பீப்பாயில் இருந்ததை பார்த்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்பு, குழந்தையை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ள போது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அங்கு குழந்தையைபரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் மூச்சு திணறி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
குழந்தையை இழந்த பெற்றோர்களுக்கு திருமணமாகி ஒரு வருடமே ஆன நிலையில் இந்த சோக சம்பவம் ஏற்பட்டதால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கவலையுடன் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |