எல்லோரையும் விட மோசமான பிரிட்டிஷ்காரர் இவர் தான்! பல மர்ம கொலைகளை அசால்ட்டாக செய்த அசுர மனிதன்!
பல நூறு வருடங்களுக்கு முன் விபச்சாரிகளை குறி வைத்து அவர்களை கொலை செய்த மனிதனை நூறு வருடங்களாகியும் போலீஸ் மற்றும் பல அதிகாரிகளாலும் விடமுடியவில்லை. ஆனால் இவனது இந்த 5 கொலைகளும் மிக கொடூரமான முறையில் அமைந்தது.. கொலை செய்யும் இவன் சரியாக விபச்சாரிகளை மாத்திரமே குறியாக இருந்தது.
1888 இல், கிழக்கு லண்டனில் ஒயிட்சபல் வட்டத்தில் பல கோரமான கொலைகளை செய்த மர்ம நபர்தான் கிளிப்பர் ஜேக்.. இவனால் விபசாரிகள் மாத்திரமே கொள்ளப்பட்டனர்
. பல வருடங்களாக மிக தீவிர போலீஸ் துப்பு தேடியும், கொலைகாரன் யார் எனக் கண்டு பிடிக்கவில்லை. ஆனால் இன்றுவரை, புத்தகம், சினிமா, தொலைக்காட்சி மூலமாக யார் அவர் என பல வதந்திகள் பரவி வருகின்றன.
தன்னால் தாக்கப்படபோக இருப்பவர்களை ஜேக் முதலில் பின் தொடர்கின்றான், அவர்களது தினம் நடவடிக்கைகளை நோட்டமிடுகின்றான்.. பின் யாருமில்லாத இடத்தை தேர்வு செய்து அவர்களை கடத்துகின்றான்.
பின் தனது இடத்தில் அவர்களை கத்தியால் பல முறை அவர்களின் உடல் உறுப்புகளை வெட்டுவதும் அவர்களின் தலையை சேதப்படுத்துவதும் அவனது கொலைசெய்யும் அடையாளமாகி வந்தது.
அந்த ஆண்டுகளில் மற்றும் 30-40 பெண் கொலை வழக்குகள் கொலைகாரன் அடையாளம் காணப்பட்டதால் ஜேக்கின் கொலை செய்யும் முறை தான் எனவும் அதற்கு காரணம் அவன் தான் எனவும் கூறினர்.
கிழிப்பர் கேசை புலனாய்வு செய்த காவல் துறையினரின் குறிப்பில் 6 பேர் மேல் சந்தேகம் காணப்பட்டது. இவர்கள் முக்கியமாக சிறிய குற்றங்களை செய்து, சிறையில் காலம் கடத்தியவர்கள் . இதைத் தவிர இன்னும் 4 பேர் மேலும் சந்தேகம் காணப்பட்டது.
பிற்காலத்தில் எழுத்தாளர்கள் இன்னும் 19 பேரை சந்தேகிக்கிறனர். அப்படிப்பட்டவர்களில் முக்கியமானர்கள் இங்கிலாந்து அரசு குடும்பத்தை சார்ந்த ஆல்பெர்ட் விக்டர், விக்டோரியா அரசியின் மருத்துவர் டாக்டர் ஜான் வில்லியம்ஸ், ஆல்பெர்ட் விக்டரின் ஆசிரியர் ஜேம்ஸ் ஸ்டீவன். என்பவர்கள் மீது சந்தேகம் இருந்த போதும் அது சரியாக நிரூபிக்கப்படவில்லை
கொலைகள் நடந்து சுமார் 120 வருடம் ஆகியும் பொதுசன இலக்கியத்திலும், எழுத்தாக்கத்திலும் மக்கள் கிழிப்பர் ஜேக் பற்றி ஆர்வம் காட்டினர். போலீஸாரால் கண்டுபிடிக்கமுடியாத இந்த ஜேக் வழக்கு கரையான் அரித்து போக ஒரு நீண்ட தொடர் கோப்பாகவே காணப்படுகிறது...
கிழிப்பர் ஜேக் 2006ல் நடந்த பி.பி.சி.யின். 'எல்லோரையும் விட மோசமான பிரிட்டிஷ்காரர் யார்' என்ற வாக்கெடுப்பில் மக்கள் வாக்களிக்க முதலாவதாக வந்தார் .