அந்த இந்திய வீரர் விளையாடாதது ஆச்சரியம்: இங்கிலாந்தின் முன்னாள் வீரர்
இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் விளையாடாதது தனக்கு ஆச்சரியம் அளிப்பதாக முன்னாள் வீரர் மான்ட்டி பனேசர் தெரிவித்துள்ளார்.
மான்ட்டி பனேசர்
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

ஆரம்பத்தில் நீக்கம்.,காயத்தால் வீரர் வெளியேற கிடைத்த வாய்ப்பு: ருத்ர தாண்டவமாடிய கான்வே கூறிய விடயம்
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி 23ஆம் திகதி தொடங்குகிறது.
இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட்டின் முன்னாள் வீரரான மான்ட்டி பனேசர் (Monty Panesar) இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்படாதது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அர்ஷ்தீப் சிங்
அவர் கூறுகையில், "அர்ஷ்தீப் சிங் (Arshdeep Singh) விளையாட வேண்டும். அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர் நல்ல கோணங்களில் பந்துவீச முடியும். மேலும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஒரு நல்ல தேர்வாக இருக்கப் போகிறார்.
இந்த இங்கிலாந்து நிலைமைகளில் அவர் மிகவும் சிறப்பாக செயல்படுவார். மேலும், பும்ரா அடுத்தப் போட்டியில் விளையாட வேண்டும்.
இது இந்தியாவுக்கு கட்டாயம் வெல்ல வேண்டிய போட்டி. அவர்கள் தங்கள் சிறந்த தாக்குதலை வெளிப்படுத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |