2032யில் மனித வரலாற்றில் முதல்முறையாக நடைபெற உள்ள நிகழ்வு! பூமிக்கு ஆபத்தா?
நிலவில் இருந்து நேரடியாக பூமிக்கு விண்கல் மழை பொழிய வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விண்கல் மழை
சமீபத்திய வானியல் ஆய்வுகளின்படி 2032ஆம் ஆண்டில் மனித வரலாற்றில் முதல்முறையாக நிகழ்வு ஒன்று நடைபெற உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
அதாவது, நிலவில் இருந்து பூமிக்கு நேரடியாக விண்கல் மழைபொழிய வாய்ப்புள்ளது என்றும், இது முற்றியுலும் மாறுபட்ட நிகழ்வாக இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.
ஏனெனில், பூமியில் நிகழும் விண்கல் தாக்குதல்கள் சூரியனைச் சுற்றும் வால்மீன்களில் இருந்து வெளியேறும் தூசித் துகள்கள் அல்லது சிறிய பாறைகளால் ஏற்படுகின்றன.
நிலவுடன் மோதப்போகிறது
இந்த நிலையில் 2032யில் நடைபெற உள்ள நிகழ்வானது, ஒரு விண்கல் நிலவுடன் மோதும்போது வெளியேறும் துகள்கள் பூமியை வந்தடையும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
'2024 YR4' என்ற விண்கல்தான் நிலவுடன் மோதப்போகிறது என்றும், இதனால் வெளியேறும் துகள்கள் புவியின் வளிமண்டலத்துடன் உராய்வதால் எரிந்து, வானில் பிரகாசமான ஒளிக்கீற்றுகள் மற்றும் எரிகற்கள் ஆகியவற்றை உருவாக்கும் என கூறப்பட்டுள்ளது.
அதே சமயம் சமீபத்திய ஆய்வுகள் பூமியை இந்த விண்கற்கள் தாக்க வாய்ப்பில்லை என்றும், நிலவினை தாக்கவே சுமார் 4 சதவீதம் வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறது.
மேலும், 2032ஆம் ஆண்டில் நிலாவைத் தாக்கினால் ஒருநாள் நிகழ்வாக பூமிக்கு அமையும். இந்த தாக்குதல்களால் நிலவின் மேற்பரப்பில் பல இடங்களில் கூடுதல் பள்ளங்கள் உருவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |