சந்திரயான் 3 விண்கலம் எடுத்த நிலவின் பள்ளத்தாக்கு புகைப்படம்!
சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள லேண்டர் கேமரா மூலம் எடுக்கப்பட்ட நிலவின் மற்றொரு புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
இஸ்ரோ வெளியிட்ட புகைப்படம்
சந்திரயான் 3 விண்கலம் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நிலவின் சுற்றுவட்ட பாதையில் கடைசி முறையாக உயரம் குறைக்கப்பட்டுள்ளது. விண்கலத்தில் இருந்து லேண்டர் பிரிக்கப்பட உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 9 ஆம் திகதி நிலவின் சுற்றுவட்ட பாதையில் 4,400 கிலோமீட்டரில் சந்திரயான் 3 விண்கலம் நிலவின் புகைப்படத்தை எடுத்துள்ளது.
இந்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்க கூடிய லேண்டரில் உள்ள கேமரா மூலம் எடுத்த பூமி மற்றும் நிலவின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டது.
நிலவின் பள்ளத்தாக்கு
இஸ்ரோ வெளியிட்ட இந்த புகைப்படத்தில் நிலவின் பள்ளத்தாக்கு தெளிவாக தெரியும்படி உள்ளது. அதாவது, நிலவின் மேற்பகுதியில் இருக்கும் கூலம்ப், போக்ஸோபட், வெப்பர், டைசன் போன்ற பள்ளத்தாக்குகள் ஆகியவை தெளிவாக தெரிகின்றன.
சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள லேண்டர் கிடைமட்ட கேமரா மூலம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதன் மூலம் லேண்டரில் உள்ள கேமரா சோதனையும் நடைபெற்று முடிந்துள்ளது.
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) July 25, 2023
The orbit-raising maneuver (Earth-bound perigee firing) is performed successfully from ISTRAC/ISRO, Bengaluru.
The spacecraft is expected to attain an orbit of 127609 km x 236 km. The achieved orbit will be confirmed after the observations.
The next… pic.twitter.com/LYb4XBMaU3
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |