வீட்டின் கழிவறையை விட ஃபிரிட்ஜில்தான் அதிகளவு பாக்டீரியாக்கள் இருக்கும்: ஆய்வு தரும் அதிர்ச்சி தகவல்
உணவுப் பொருட்களை நீண்ட நாட்களுக்கு பாதுகாக்க உதவும் இயந்திரமாக இந்த குளிர்சாதனப்பெட்டி பயன்படுத்தப்படுகிறது.
பொதுவாக குளிர்பானங்கள், பால், காய்கறிகள், பழங்கள் மற்றும் அவசியமான உணவுப் பொருட்களை நாம் ஃபிரிட்ஜில் வைக்கிறோம்.
இதுபோன்று ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தப்படும் உணவுகளை ஆராய்ச்சி செய்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டிருக்கின்றனர்.
ஆய்வு தரும் அதிர்ச்சி தகவல்
குறிப்பாக சமைத்த பொருட்களை குளிரூட்டி, பின்னர் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது உடல்நலனுக்குத் தீங்கானது.
நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ ஃபிரிட்ஜ் உள்ளே எண்ணற்ற நோய்க் கிருமிகள் ஊடுறுவக் கூடும்.
வீட்டின் கழிவறையை காட்டிலும் ஃபிரிட்ஜில்தான் அதிகளவு தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்ட்டீரிய இருக்கிறது என்று உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், உடல் ஆரோக்கிய மேம்பாட்டுத்துறை தெரிவிக்கிறது.
வீடுகளில் பயன்படுத்தப்படும் ஃபிரிட்ஜ்களின் உட்புற மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்த பிறகுதான் இந்த முடிவை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வெளியிட்டு இருக்கின்றனர்.
ஃபிரிட்ஜை எத்தனை நாள் இடைவெளியில் சுத்தம் செய்வதை பொறுத்துதான் பாக்ட்டீரியாக்களின் அளவீடு மாறுபடுகிறது.
இருப்பதிலேயே ஃபிரிட்ஜ் டோர் பகுதியில் தான் அதிகமான அழுக்கு மற்றும் கிருமிகள் இருக்கிறதாம்.
ஃபிரிட்ஜிலேயே கொஞ்சம் வெதுவெதுப்பான பகுதி என்றால் அது டோர்தான். இந்த வெதுவெதுப்பான வெப்பநிலை என்பது பாக்டீரியா வளரவும், இனவிருத்தி செய்யவும் போதுமானதாக இருக்கும்.
ஆபத்தான ரசாயனங்களை பயன்படுத்தாமல், மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது கட்டாயமாக ஃபிரிட்ஜை சுத்தம் செய்ய வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |